Canada Mirror
Press release/News aggregator
Actions
Media Outlet details
| Scope | National, Asian |
|---|---|
| Language | Tamil |
| Country | India |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search Articlesஇலங்கை விமான நிலையத்தை பரபரப்பாக்கிய கனேடியர் ; சோதனையில் காத்திருந்த ஷாக்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியில் 'பிரைட்' பேரணி மீது வாகனம் மோதி விபத்து ; ஒருவர் பலி, 14 பேர் காயம்
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற 'பிரைட்' (Pride) பேரணியின் போது மக்கள் கூட்டத்திற்குள் சிற்றூந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பெர்லினில் பேரணி நடைபெற்ற பகுதிக்கு அருகே மக்கள் திரண்டிருந்த கூட்டத்திற்குள் வாகனம் ஒன்று அதிவேகமாகப் புகுந்து மோதியது. இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய கப்பல் மீது தாக்குதல் ; உக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்
ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் இராணுவம் கஸ்பியன் கடலில் மேற்கொண்ட தாக்குதலை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாகக் கண்டித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸுடன் தொலைபேசியில் உரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு ஆதரவளித்தவர்கள் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமூகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
90 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம் ; இரு சீனர்களுக்கு பீல்ட்ஸ் மெடல்
உலக அளவில் கணிதத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் 'பீல்ட்ஸ் மெடல்' (Fields Medal) விருது, முதல் முறையாக இரு சீன அறிஞர்கள் வென்று புதிய வரலாறு படைத்துள்ளனர் இவ்விழாவானது அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 வயதிற்குட்பட்ட சிறந்த கணித அறிஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, முதல் முறையாக இரு சீன அறிஞர்கள் வென்று புதிய வரலாறு படைத்துள்ளனர்.
மத்திய கிழக்கில் அமைதிக்கான அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள்
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலாகவே இருந்த மத்திய கிழக்கு பதற்றத்தில், இஸ்ரேல் பெருமளவில் விலகியிருந்து கவனித்து வருகின்றது. தெற்கு லெபனானில் ஆயுதங்களைக் குறைக்கும் முன்னோடித் திட்டத்தை தொடங்குவதற்கு லெபனான் மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களை ஒப்புக்கொள்ள வைப்பதில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினரால் மோதல் பிராந்தியத்தின் பிற பகுதிகளுக்குப் பரவுவதை அமெரிக்கா விரும்பவில்லை.
ஐரோப்பா முழுவதும் தீவிரமடைந்துள்ள காட்டுத்தீ ; 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்மேற்கு பிரான்ஸில் வீசிவரும் பலத்த காற்று மற்றும் அதிக வெப்பம் காரணமாகக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், தீயானது போர்டோ (Bordeaux) நகரை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
ஈரானுக்கு ஆயுதங்கள்; சீனா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந் நிலையில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் தனது சமூக வலைதளமான “ட்ரூத் சோஷியல்” தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!
ஈரானில் இருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன. கெஸ்பியன் கடல் பகுதியில் பயணித்த, ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களையே யுக்ரேனிய படைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் நான்காண்டுகளைக் கடந்து தீவிரமாகத் தொடர்கிறது.
சவூதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஏவுகணை தாக்குதல்
சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம் வெற்றிகரமாக மறித்து அழித்துள்ளனர். சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்க தயாரிப்பான பேட்ரியோட்வான் பாதுகாப்புத் தொகுதியை கிரேக்க இராணுவத்தினர் அங்கு இயக்கி வருகின்றனர்.
லண்டன் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்; 8 மாதம் கழித்து வந்த அதிர்ச்சி தகவல்
லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் அறையின் குளியலறையில் மயங்கிக்கிடந்த இளவரசரை ஹோட்டல் ஊழியர் கண்டுபிடித்து அவசர உதவிக்கு அழைத்துள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.