IBC Tamil
Verified
Broadcaster
IBC Tamil is a multimedia company offering subscription-free Tamil radio, television, magazine and online services across the globe. Source
Actions
Media Outlet details
| Scope | International |
|---|---|
| Language | Tamil |
| Country | India |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search Articlesசொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இறுதிச்சடங்கிற்கு சென்று கொண்டிருந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம்
அனுராதபுரத்தில் உள்ள மரடன்கடவல காவல்துறை எல்லைக்குட்பட்ட மரடன்கடவல நகரில், இன்று (09)காலை சுமார் 10.35 மணியளவில் பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட ஒரு பயங்கர வீதி விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்ததாக மரடன்கடவல காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள், திருப்பனை, பித்தல, கொண்டேருமகரம்பே கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான சலிந்த கெதேர தில்கி மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகன், 24 வயதான ரத்நாயக்க முதியன்செலகே நிகேஷ் ருவந்த தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 செப்டெம்பர் 9ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
அமெரிக்காவிற்கு பேரிடி : ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை கைப்பற்றியது ஈரான்
அமெரிக்க இராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கைப்பற்றியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பலானது மேல் தளத்திற்கு திரும்பாமல் 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்றும் 6,000 மீட்டர் ஆழம் வரையில் மூழ்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அன்டுரிலின் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்கவில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இலங்கை பெண்கள் கைது
சட்டவிரோத ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இரு இலங்கை வர்த்தகப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைபெருளின் மொத்த பெறுமதி 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது. குறித்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (09.09.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை! வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு சிக்கல்
Wimal Weerawansa Udaya Gammanpila Court of Appeal of Sri Lanka By Dharu Share 0 Shares முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
மொட்டுவின் முன்னாள் எம்.பி ஒருவரும் விசாரணை வளையத்துக்குள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி, பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்க வர்த்தமானி: தடையுத்தரவை நீடித்த நீதிமன்று
Vavuniya Northern Province of Sri Lanka By Independent Writer Share 0 Shares Courtesy: Kabil வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால்(அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் மகிழுந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற மகிழுந்தின் சாரதி, கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பொது வைத்தியசாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாமலை சிறையில் அடைத்த அரசின் திட்டங்கள் வெற்றிபெறாது : ரோஹித எம்.பி சூளுரை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியை செயலிழக்கச் செய்யும் நோக்கில் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சித்தாலும், அந்த திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டினார்.