Ananda Vikatan
VerifiedMagazine
Ananda Vikatan is a Tamil language weekly magazine published from Chennai, India. It was the second largest magazine in circulation within India, as of 2017. Source
Actions
Media Outlet details
| Scope | National |
|---|---|
| Language | English, Tamil |
| Country | India |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
| Frequency | Weekly |
| Days Published | N/A |
Recent Articles
Search Articlesமொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்
Published:Just Now அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் ‘மொத ராத்திரி' படத்தைப் பார்த்த நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார்.
பாமாயில் கொள்முதல் விவகாரம்: ``ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்" - உதயநிதி குற்றச்சாட்டு
Published:8 mins ago தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
விவாகரத்து பெற்ற மனைவிக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஒன்று கூடிய ஆண்களின் கோரிக்கைகள் என்னென்ன?
தற்போது பித்ரு பக்ஷா எனப்படும் 16 நாள் சடங்குகள் நடந்து வருகிறது. இந்த 16 நாட்களில் இறந்த உறவுகளுக்கு திதி அல்லது திவசம் கொடுக்கப்படுவது வழக்கம். ஒவ்வொருவரும் தங்களது இறந்த உறவுகளுக்காக ஆறுகள், கடல்கள் மற்றும் நீர்நிலைகளில் இது போன்ற சடங்குகளைச் செய்வது வழக்கம். மும்பையின் தென்பகுதியில் உள்ள பானகங்கா குளத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் இறந்தவர்களுக்காக உறவினர்கள் திதி கொடுப்பது வழக்கம். பானகங்கா தீர்த்தம் என்பது ராமர் வனவாசம் சென்ற காலத்தில் உருவாக்கியது என்று கூறப்படுவதுண்டு.
திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்
Published:Just Now திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ், எம்.பி கிறிஸ்டோபர் திலக், த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், ``தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நல்லாட்சியில் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
'5 மாதங்களாக தமிழ்நாட்டின் GST வசூல் இறங்கு முகம்' - நிபுணர் கூறும் பொருளாதாரக் காரணம் என்ன?
Published:Just Now கடந்த மே மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது. ஏன் இந்தத் திடீர் மைனஸ் என்கிற கேள்வி எழுவது நியாயமானதே. இந்த வசூல் குறைவிற்கு ஆட்சி மாற்றம் போன்ற அரசியல் காரணங்களும் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சரிவிற்குப் பொருளாதார ரீதியிலான கோணத்தைத் தெரிந்துகொள்வதும் முக்கியம். தமிழ்நாட்டில் தற்போது ஏன் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது என்பதை பொருளாதாரக் கோணத்தில் விளக்குகிறார் பொருளாதார நிபுணர் சிவகுமார். ''> ஜி.எஸ்.டி என்பது நுகர்வு சார்ந்த ஒரு வரி ஆகும்.
'மனைவி கேட்ட ரூ.1 கோடி, மகனின் மருத்துவ செலவால் கடன்' - 43வது மாடியிலிருந்து குதித்த பொறியாளர்
டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சாம்பவ் ஜெயின் (28). சாப்ட்வேர் எஞ்சினியராக இவர் நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். அந்த ஹோட்டலின் 43 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் பால்கனியின் வெளியில் இருந்த கம்பெனியில் தொங்கியபடி காணப்பட்டார். அவர் தொங்கிக்கொண்டிருந்தபோது கையை விட்டுவிட்டார். இதனால் 43வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார். தற்கொலைக்கு முன்பு ஜெயின் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.
தாராபுரம்: முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளியா? சர்ச்சை பின்னணி என்ன?
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ள சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நேற்று ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வாக்காளர்களைக் கவரும் வகையில் மாட்டு வண்டியில் பயணித்தும் விவசாயிகளுடன் முருங்கைக்காய் பறித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் மாட்டு வண்டி பயணித்தின்போது அஷோக் என்ற நபர் அந்த மாட்டு வண்டியை ஓட்டியுள்ளார்.
"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" - திமுக எம்.பி. கனிமொழி
Published:1 min ago மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்.6) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தூய சக்தி எனக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, தவெக பணப் பட்டுவாடா செய்கிறது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது. இவர்களின் உண்மையான முகத்தை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
“மாதவிடாய் நிற்கும் முன்பருவமும் நானும்!” - பெண்களின் உடல், மனம் குறித்த ஓர் ஆத்மார்த்தப் பதிவு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் “மாதவிடாய் நிற்கும் முன்பருவமும் நானும் என்னை நானே காண்கின்ற பருவத்தில் நுழைகின்றேன் நிறுத்தி நிதானமாக கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். அவசரகதியில் ஒடிக்கொண்டே இருந்ததில் என் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதற்கு மறந்தே போயிருந்தேன்.
`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்
குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரிய திரைத்துறைக்குள் நுழைவதற்கும், தங்களின் திறமையை நிரூபிக்கும் சிறந்த நுழைவுச்சீட்டாகக் குறும்படங்கள் அமைகின்றன. சமீபத்தில் சென்னையில் உள்ள ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் 'நேர்காணல்' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. அதன் இயக்குநரான ஜி.கேவிடம் பேசினோம்.