அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, நேற்று அமெரிக்கா ஈரானுக்கு 24 மணிநேர கெடு விதித்த நிலையில், இக்காலம் முடியும் வேளையில் ஈரானின் உச்ச தலைவராக இருக்கும் முஜ்தபா கமெனி-யின் பதிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் வழித்தடத்தில் ஈரான் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதிற்கு பதிலடியாக அமெரிக்கா ஈரான் மீது கடந்த 3 நாட்களில் 170 முறை ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஈரானின் பெருமளவிலான ராணுவ தளங்களும், கட்டமைப்புகளும் பாதிப்புக்குள்ளானது.